விபத்துக்குள்ளான ஆடவருக்கு உடனே உதவிய மக்கள்

தஞ்சோங் காத்தோங் சாலையில் நேற்று விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் ஓட்டுநருக்குப் பாதசாரிகள் விரைந்து வந்து உதவினர். பிற்பகலில் அந்த விபத்து நிகழ்ந்ததால் கொளுத்தும் வெயி லிலிருந்த அந்த ஓட்டுநருக்கு ஒரு சிலர் குடைகளைப் பிடித்தனர். வேறு சிலர் அவர் சுயநினைவுடன் இருப்பதை உறுதி செய்ய அவரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்த வண்ணம் காணப்பட்டனர்.

தஞ்சோங் காத்தோங் சாலை, கிரே லேன் ஆகியவற்றின் சந்திப் பில் உள்ள 'அவர் லேடி குவீன் ஆஃப் பீஸ்' என்ற தேவால யத்திற்கு முன் நேற்று பிற்பகல் சுமார் 12.50 மணியளவில் ஒரு கார், ஒரு மோட்டார்சைக்கிள், ஒரு வேன் ஆகியவை விபத்துக் குள்ளாகின எனப் போலிஸ் தெரிவித்தது. கிரே லேனிலிருந்து தஞ்சோங் காத்தோங் சாலைக்குத் திரும்பிய வேனுக்கும் மோட்டார்சைக்கிளு க்கும் இடையே விபத்து நிகழ்ந்தது என நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து அங்கிருந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கீழே விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்குத் தங்களால் ஆன உதவியைச் செய்தனர்.

விபத்தில் அடிபட்ட ஆடவருக்கு உதவும் மக்கள். படம்: ஸ்டாம்ப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!