ரொஹிங்யா அகதிகளுக்கு மலேசியா உதவி; பங்ளாதேஷ் அனுமதி

கோலாலம்பூர்: பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள ரொஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு உதவ மலே சியா அனுப்பிய உதவி பொருட் களை ஏற்றுக்கொள்ள பங்ளாதேஷ் முன்வந்துள்ளது. மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமானும் மலேசியாவுக் கான பங்ளாதேஷ் தூதரும் சந்தித்துப் பேசிய பிறகு மலேசிய கப்பலுக்கு பங்ளாதேஷ் அரசு அனுமதியளித்தது. இதற்கு முன்பு பங்ளாதேஷ்‌ஷின் டெக்னாஃப் துறைமுகத்தில் நுழைய மலேசிய உணவுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவு காரணமாக இந்த விவ காரத்துக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. சுமார் 2,200 டன் உணவுப் பொருட்களையும் அவசர உதவி பொருட்களையும் ஏற்றிச்சென்ற 'ஃப்லோடில்லா' என்ற கப்பல் முதலில் மியன்மாரின் யங்கூனில் நங்கூரமிட்டு பொருட்களை இறக் கியபிறகு பங்ளாதேஷ் நாட்டுக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. சுமார் 250 தொண்டூழியர்களும் அம்னோ, பாஸ் போன்ற அரசியல் கட்சி உறுப்பினர்களும் மருத்துவர் களும் கப்பலில் உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!