ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நிகழ்ந்த படகு விபத்தில் ஆறு பேர் இறந்தனர் என்றும் மூவர் காணவில்லை என்றும் அந்நாட் டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோனீசியாவின் கிழக்கே 29 பேருடன் பயணம் செய்த படகு வெள்ளிக்கிழமை மதியம் மூழ்கியது. தெற்கு சுலாவசியில் டகாலார் ஆற்றிலிருந்து தானா கெக்கே துறைமுகத்தை நோக்கி அந்தப் படகு சென்றபோது விபத்துக்குள்ளானது.
இருபது பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர் களைத் தேடும் பணி தொடர் கிறது என்று அதிகாரிகள் கூறி னர். விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் தெரியவில்லை என்று இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். படம்: மலேசிய ஊடகம்