கோட்டையை நோக்கி பேரணி: வேல்முருகன் அறிவிப்பு

கடலூர்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள், மீனவர்கள், தலித் மக்கள் ஆகியோர் மீது காவல்துறை பதிவு செய் துள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார். கடலூரில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ் வுரிமை கூட்டமைப்பு சார் பில் சென்னை கோட்டையை நோக்கி 7ஆம் தேதி கருப்புக்கொடி ஊர்வலம் நடைபெறும் என்றார். "போலிஸ் தடியடியின் போது காயமடைந்தவர்களுக்கும் பொருட்சேதம் ஏற்பட்டவர்களுக்கும் தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

"போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் தடியடி நடத்த காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வேல்முருகன் வலியுறுத்தினார். மெரினாவில் நடந்த தடியடி குறித்து தற்போது பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத் தில் முக்கிய பதவிகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!