ஹூத்: பிரிமியர் லீக்கில் நீடிக்க போராடவேண்டும்

லீக் காற்பந்துப் போட்டியில் நீடித்திருக்க நடப்பு வெற்றி யாளரான லெஸ்டர் சிட்டி அடுத்து வரும் ஆட்டங்களில் கடுமையாகப் போராடவேண்டும் என்று அக்குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் ராபர்ட் ஹூத் (படம்) தெரிவித்துள்ளார். இந்தப் பருவத்தில் லீக் பட்டத்தை வெல்வது குறித்து லெஸ்டர் யோசிப்பதில் பயனில்லை என்று அவர் கூறினார். மாறாக, அடுத்த பருவத்தில் இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் ஹூத். 23 ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஐந்து ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்று 21 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் 16வது இடத்தில் லெஸ்டர் திணறி வருகிறது. 20 குழுக்களைக் கொண்ட லீக்கில் கடைசி மூன்று இடங்களில் முடிக்கும் மூன்று குழுக்கள் இரண்டாம் நிலை லீக்குக்குத் தள்ளப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!