தமிழவேளை சிறப்பித்த மணிமன்றம்

தமிழ் முரசின் மாணவர் இதழான மாணவர் மணிமன்ற இதழ் வழி உருவான இளையர் மணி மன்றத்தின் மணிவிழாக் கொண் டாட்ட நிறைவு 21, 22 தேதிகளில் பெரிய அளவில் போர்ட்டிக்சன், லுக்கூட்டில் நடைபெற்றது. தமிழ் இளைஞர் மணிமன்றம் என்ற பெயரில் மலேசியாவெங்கும் துடிப்புடன் இயங்கும் இந்த இளையர் இயக்கம் தேசிய அளவில் 60 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

"நான் இளைஞர் துறையின் அமைச்சராக இருந்தபோது தமிழ் இளைஞர் மணி மன்றம் தமிழ் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை வளர்ப்பதற்காக நாடு முழுவதும் ஆற்றிய சேவை நடவடிக்கைகளைப் பார்த்திருக் கிறேன். இந்நாட்டில் இந்தியர்கள் 7.4 விழுக்காடு இருக்கிறார்கள். அவர்கள் ரப்பர் தோட்டங்கள், ரயில்வே, சாலையமைப்பு, வணிகத் துறை, நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் ஆற்றிய சேவையை மறக்க முடியாது," என்று திரு நஜிப் குறிப்பிட்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் நடை பெற்ற தமிழர் திருநாள் போட்டி கள், நிகழ்ச்சிகளில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழவேள் கோ.சாரங்கபாணியின் சார்பில் அவரது மகள் ராஜம், மலேசியப் பிரதமர் நஜிப்பிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!