தோல்வி கண்டது டிரம்ப் மேல்முறையீடு

ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவோருக்கு எதிராக விதித்த தடையை உடனடியாக செயல்படுத்த ஏதுவாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செய்த மேல்முறையீட்டு மனுவை அமெரிக்கக் கூட்டரசு மேல்முறை யீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலையில் நீதிமன்றம் பிறப் பித்த இந்த உத்தரவின்படி, குறிப் பிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்க செல்ல விதிக் கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. சிரியா, ஈராக், ஈரான், சூடான், சோமாலியா, ஏமன், லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு ஜனவரி 27ஆம் தேதி 90 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்தார் டிரம்ப்.

அந்த உத்தரவைத் தொடர்ந்து அமெரிக்க விமான நிலையங்கள் அல்லோலகல்லோலப்பட்டன. டிரம்ப்பிற்கு எதிராக பல்லாயிரக் கணக்கானோர் நாட்டின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். தொடர்ந்து டிரம்ப்பின் ஆணைக்கு சியேட்டல் நீதிமன்றம் ஒன்று வெள்ளிக்கிழமை தடை விதித்தது. அத்தடைக்கு எதிராக டிரம்ப் அரசாங்கம் செய்த மேல் முறையீடு தற்போது நிராகரிக்கப் பட்டுள்ளது. மேல்முறையீட்டு விசாரணை முடியும்வரையில் டிரம்ப் அரசு கோரிய இடைக்காலத் தடை நிரா கரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!