கைகழுவச் சென்றவர் ஆற்றில் விழுந்து மரணம்

காலாங் ஆற்றில் கைகழுவச் சென்ற 57 வயது சுஹைமி அபுபக்கர் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள புளோக் 14ஏ அருகில் உள்ள காலாங் ஆற்றுப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் நிகழ்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்த 33 வயது திரு லியூ, திரு சுஹைமி, குப்பைத் தொட்டியில் இருந்து சில செய்தித்தாட்களை எடுத் ததைக் கண்டதாக சீன நாளி தழான வான் பாவ்விடம் கூறினார். "அவர் எதற்காக அந்த செய்தித்தாட்களை எடுத்தார் எனத் தெரியவில்லை," என்ற திரு லீ, அதில் ஒட்டியிருந்த நாயின் மலம் அவரது கைகளில் பட்டதால் அவர் கைகளைக் கழுவச் சென்றார் என்றும் கூறினார்.

ஆற்றை ஒட்டியிருந்த கம்பித் தடுப்பைத் தாண்டிக் குதித்த சுஹைமி, ஆற்றில் கை கழுவ முயன்றுள்ளார். "பத்து நிமிடங்கள் கழித்து ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது சுஹைமியைக் காணவில்லை. ஓடிச்சென்று பார்த்தேன். தண்ணீர் கலங்கி இருந்ததால் எதுவும் தெரியவில்லை," என்று திரு லியூ கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!