ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக் கட்டு திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. அவனியாபுரத்தில் லட்சக் கணக்கானோர் மத்தியில் வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கி, பரிசுகளைக் குவித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாள் அன்று அவனியாபுரத்தி லும் மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் புகழ்பெற்ற அலங்கா நல்லூரிலும் நடைபெறும். இந்நிலையில் உச்ச நீதி மன்றத்தின் தடை காரணமாக கடந்த ஈராண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஜல்லிக் கட்டுக்காக இளைஞர்கள், மாண வர்கள், தமிழக மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, மத்திய அரசின் ஒப்புதலின் பேரில் தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக் கட்டிற்கு 916 காளைகள் முன் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 626 காளைகளே ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வரப்பட்டன. இதில் மருத்துவர்கள் சோதனைக்கு பின்னர், 524 காளைகளே ஜல்லிக் கட்டில் அனுமதிக்கப்பட்டன.
அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் காளை. படம்: மணி