தென்கொரிய கடைத் தொகுதியில் தீ

சோல்: தென்கொரியாவில் உயர் மாடிக் கடைத்தொகு திக் கட்டடம் ஒன்றில் நேற்று தீ பற்றியது. நான்கு பேரைப் பலிவாங் கிய இந்தத் தீ விபத்தில் 40க்கு மேற்- பட்டோர் காயமடைந்தனர். 47 பேர் மூச்சுத் திணற லுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் இரு வர் கட்டுமான ஊழியர் கள், மற்ற இருவர் கடைத் தொகுதி ஊழியர்கள். தென்கொரியாவின் தென்- பகுதியில் உள்ள டொங் டான் என்னும் நக ரில் இந்தக் கடைத் தொகுதி உள்ளது. அங் குள்ள குழந்தைகள் விளை யாடுமிடச் சீரமைப் பின் போது இரும்புக் கம்பி- கள் சிலவற்றை இணைப்பதற்காக பற்ற வைக்கும் பணி (வெல்டிங்) நடந்துகொண்டிருந்தது.

அப்போது நெருப்புப் பொறிகள் நாலா பக்கமும் தெறித்ததால், தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப் படுகிறது. நல்ல வேளையாக தீப்பற்றிய- போது குழந்தைகள் விளையாட்டுக் கூடம் மூடியிருந்ததால் உயிர்ப்பலி குறைந்துள்ளது. தென்கொரியாவில் இதற்கு முன்பு நடந்த சில தீ விபத்துகளுக்- கும் பற்றவைக்கும் பணியின்போது தீப்பொறி பரவியதே காரணமாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!