துருக்கியில் 60 பேர் கைது

அங்காரா: துருக்கி காவல்துறை- யினர் நேற்று தலைநகர் அங்காரா- வில் பல இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். அந்தச் சோதனைகளில் ஐஎஸ்- ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டுக் கொண் டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது என அர சாங்க ஏடு கூறியுள்ளது. கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டிருக் கும் அவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என்று துருக்கி அரசாங்கத்தின் அனா டொலு செய்தி நிறுவனம் தெரி வித்தது. கைது செய்யப்பட்டவர்கள் ஏதேனும் தாக்குதலுக்குத் திட்ட மிட்டிருந் தனரா என்பது பற்றிய விவரங் களை அது வெளியிடவில்லை. அங்காராவின் சின்கான், குயுபுக், எனிமகால்லெ மற்றும் மாமக் ஆகிய வட்டாரங்களில் அந்தச் சந்தேகப்பேர்வழிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகளால் கடந்த மாதம் இஸ்தான்புல்லில் நிகழ்த்தப்- பட்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இரவு விடுதிக்குள் திடீரென துப்பாக்கிக்காரன் ஒரு வன் நுழைந்து புத்தாண்டு தினத் தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண் டிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டான். துருக்கியில் நடந்த அந்தக் கொடூரத் தாக்குதலுக்கு மட்டும் ஐஎஸ்எஸ்எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் 2016ஆம் ஆண்டு துருக்கியில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்- களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கமே காரணம் என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!