உச்சநேரமற்ற கார்கள் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சி

சிங்கப்பூர் சாலைகளில் ஓடும் உச்சநேரமற்ற கார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள் ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. 2010ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டபோது உச்சநேரமற் கார்களின் எண் ணிக்கை 50,040ஐத் தொட்டது. அதிலிருந்து படிப்படி யாக எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. 11 ஆண்டு களுக்குமுன் அந்த எண்ணிக்கை 24,413 என்று இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அது மேலும் சரிந்து 22,562 ஆனது.

ஒப்புநோக்க, 2014ல் உச்சநேர மற்ற கார்களின் எண்ணிக்கை 38,146 என்றும் 2015ல் 30,469 என்றும் பதிவாகியிருந்தது என்று ஆணையம் சொல்லிற்று. மற்ற கட்டுப்பாடுகளுடன் இந்தக் கார்கள் வார நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சாலைகளில் ஓடக் கூடாது. இந்தக் கார்களுக்குப் பதிந்து கொள்வோர் $17,000 கழிவு பெறுவார்கள். அதை அவர்கள் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்திலும் வாகன பதிவுக் கட்டணத் திலும் கழித்துக் கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வருடாந்திர சாலை வரியில் $500 கழிவு கொடுக்கப்படும். உச்சநேரமற்ற கார்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை குறைந்திருந்தா லும் இந்த கார்களுக்குப் பதிந்துகொள்வோரின் எண் ணிக்கை உயர்ந்துகொண்டு வருகிறது. 2014ல் 200 பேரும் 2015ல் 807 பேரும் கடந்த ஆண்டில் 1,904 பேரும் இந்தக் கார்களுக்குப் பதிந்துகொண்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!