சென்னை: தமிழக அரசியல் களத் தில் ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டி ருக்கும் இவ்வேளையில், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், அரசி யல் கவனிப்பாளர்கள் என அனை வரது கவனமும் ஆளுநர் வித்யா சாகர் ராவ் மீது பதிந்துள்ளது. இவரது முடிவுதான் அதிமுக மட்டுமல்லாமல் தமிழகத்தின் எதிர் காலத்தையும் தீர்மானிக்கப்போகி றது எனலாம். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 76 வயதான வித்யாசாகர் ராவ், இளம் வயது முதற்கொண்டே ஏபிவிபி, ஜன்சங்கம் உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகளில் இணைந்து தீவிரமாகச் செயல் பட்டவர். பின்னர் பாஜகவில் இணைந்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநி லத்தின் சட்டப்பேரவை உறுப்பின ராக மூன்று முறை தேர்வான வித்யாசாகர் ராவ், இளம் வயதி லேயே 'காவி அரசியல்' புரிவதாகக் கூறி நக்சலைட்டுகள் இவரைக் கொலை செய்யவும் முயன்றனர். எப்படியோ, கொலை முயற்சியில் இருந்து தப்பியவருக்கு நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தேடி வந்தது. "வித்யாசாகர் ராவ் பண்பான, எளிமையான மனிதர். அவர் எடுக் கும் முடிவு நியாயமானதாகவே இருக்கும்," என்கிறார்கள் பாஜக வினர். இத்தகைய கூற்றுகள் சரிதானா என்பது மிக விரைவில் தமிழக மக்களுக்குத் தெரியவரும்.