கொலை மிரட்டல்: ஓபிஎஸ் பாதுகாப்புக்கு 10 மெய்க்காவலர்கள்

சென்னை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்புக்காக 10 புதிய மெய்க்காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தியதன் பேரிலேயே அவர் இதற்கு சம்மதித்துள்ள தாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் தலைமைத்துவப் போராட்டம் வெடித்துள்ளது. சசி கலாவும் முதல்வர் பன்னீர்செல்வ மும் அதிமுகவைக் கைப்பற்ற போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவைக் கைப்பற்ற நினைத்தால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என அக்கட்சியின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எதிர்த்தரப்பினரால் ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் எனக் கூடுதலாக பத்து மெய்க் காவலர்களை நியமிக்கலாம் என முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரி டம் வலியுறுத்தி வந்தனர். இதற்கு அவரும் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!