ஜல்லிக்கட்டு கலவரம் பற்றி விசாரணை தொடங்கியது

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைகள் தொடர்பில் விசா ரணை தொடங்கியது. நீதிபதி எஸ் ராஜேஷ்வரன் பலரையும் விசாரித்து பலவற்றையும் கேட்டு தகவல்களைத் திரட்டினார். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரை, மதுரை, கோவை உட் பட தமிழகம் முழுவதும் ஜனவரி 17 முதல் 23ஆம் தேதி வரை போராட்டம் நடந்தது. மெரினா கடற்கரைப் போராட் டத்தில் ஜனவரி 23ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற முன் னாள் நீதிபதி எஸ். ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார். அவர் தனது விசாரணையை வியாழக்கிழமை தொடங்கினார்.

ஜல்லிக்கட்டு பேராட்டத்தின் பேது நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நடுக்குப்பம் பகுதி மக்களிடம் விசாரணை நடத்துகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!