மதுரை: தமிழர்களின் வீரவிளை யாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவந்த தடை அகன்றதை அடுத்து உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று தொடங்கியது. அலங்கா நல்லூர், மகிழ்ச்சி அடங்காநல்லூ ராகக் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட் டம் அலங்காநல்லூரில் நடை பெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. தடைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத் தில் ஜல்லிக்கட்டு நடைபெற வில்லை. மாடுகள் அவிழ்த்து விடும் வாடிவாசல்கள் களை இழந்து காட்சியளித்தன.
மதுரை மாவட்டத்தில் கடந்த 5ஆம் தேதி அவனியாபுரத்திலும், 8ஆம் தேதி தொட்டப்பநாயக்க னூரிலும், 9ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டின. அலங்காநல்லூரில் நேற்று போட்டி நடந்தது. படம்: இந்திய ஊடகம்