தமிழ்நாட்டின் முதல்வராக தனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி ஆளுநரை நேரே சந்தித்து கோரிக்கை விடுத்த அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா, தன் வேண்டுகோளுக்கு ஆளுநர் நேற்று வரை செவிசாய்க்காததை அடுத்து அவருக்கும் மத்திய அரசுக்கும் பகிரங்க மிரட்டல் விடுத்தார். பொறுமைக்கு எல்லை உண்டு என்றும் ஓரளவுக்குத்தான் பொறு மையாக இருக்க முடியும் என்றும் அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்ய தாங்கள் தயாராக இருப்ப தாகவும் நேற்று சசிகலா தொண்டர் களிடம் பேசிய பேச்சு தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட் டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சசிகலா அவ்வாறு நூற்றுக் கணக்கான தொண்டர்கள் மத்தி யில் சூளுரைத்ததைத் தொடர்ந்து சென்னையிலும் அதன் சுற்றுப்புறங் களிலும் சோதனைகளை முடுக்கி விடும்படி காவல்துறைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று உத்தரவு பிறப்பித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.