சிங்கப்பூரின் மூத்த இஸ்லாமியக் கல்விமான்களுடன் 1968ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, அதன் சமயத் தீர்ப்புகளின் மூலம், சிங்கப்பூரில் நல்லிணக்கமிக்க பல கலாசார சமுதாயத்தை உருவாக்க உதவியிருப்பதாகத் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறினார். முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், சமகாலச் சமுதாயங்களில் ஃபத்வா என்ற தலைப்பில் முதல்முறையாக ஏற் பாடு செய்திருந்த மாநாட்டில் திரு தர்மன் நேற்று பேசினார்.
'ஃபத்வா' எனும் இஸ்லாமிய சட்ட ஆலோசனைக் குழு தொடங் கப்பட்டதிலிருந்து இதுநாள்வரை பற்பல துறைகளில் சிரமமான, சிக்கலான விவகாரங்களுக்குத் தீர்வு கண்டுள்ளது. மூல உயிரணு ஆராய்ச்சி போன்ற உயிரியல் மருத்துவ விவகாரங்களும் இதில் உள்ளடங்கும் என்றார் திரு தர்மன். "குழுவின் முற்போக்கான கண்ணோட்டமும், நடைமுறைக்கு உகந்த அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்கும் துணிச்சலும் மனதை நெகிழச் செய்வதாக திரு தர்மன் கூறினார்.
'ஃபத்வாஸ் ஆஃப் சிங்கப்பூர்' எனும் தலைப்பு கொண்ட நூல் வெளியீட்டில் பங்கேற்ற (இடமிருந்து) முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் ஃபட்ரிஸ் பக்கராம், முயிஸ் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் ரசாக் ஹசான், முயிஸ் தலைவர் அலாமி மூசா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்