வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஒட்டுமொத்த இந்திய சமூகமும் கைகொடுக்க வேண்டும் என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்தி ராணி ராஜா வலியுறுத்தியுள்ளார். சமூக அமைப்புகளுடன் சிண்டா நேற்று ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய குமாரி இந்திராணி, குடும்ப வன்முறை, நிதிப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் குடும்பத்துக்கு உதவுவதும் அவசியம் என்றார்.
சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி, பெரும்பா லான இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினா லும் ஏழிலிருந்து 25 வயதுக்குட் பட்ட மாணவர்களில் கிட்டத் தட்ட 20% பின்தங்கிய நிலை யில் உள்ளனர் என்றார். அதாவது, 118,573 மாணவர் களின் ஏறக்குறைய 23,715 பேர் கல்வியில் பின்தங்கி உள்ளனர். ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கணிதம், அறிவி யல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறும் விகிதத்தை அதிகரிக்க சிண்டா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என கூறினார் குமாரி இந்திராணி.