இந்தியாவின் அரசியல் எத்தனையோ தடாலடிகளை, கேலிக்கூத்துகளை, அதிரடிகளைச் சந்தித்து இருக்கிறது. அதிமுகவின் இமாலயத் தலைவியாக இருந்துவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் ஆண்டபோது, 1999 ஏப்ரல் 17ஆம் தேதி, அவரின் ஆட்சியை ஒரே ஒரு வாக்கில் கவிழ்த்துவிட்டார். இருந்தாலும் அதே வாஜ்பாய் சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் ஆட்சியைப் பிடித்தது அடுத்த அதிரடியாக இருந்தது.
ஆந்திராவில் என்.டி. ராமராவ் முதல்வராக ஆட்சி புரிந்தபோது 1984 ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16 வரை 30 நாட்கள் முதல்வராக இருந்த நரேந்திர பாஸ்கர ராவ், அரசியல் புரட்சியை அவிழ்த்துவிட்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்திச்சென்று அவர்களை மர்மமான இடத்தில் அடைத்துவைத்துக்கொண்டு தனக்கே ஆதரவு என்று கூத்தடித்தார். ஒரு வழியாக அந்த நாடகம் முடிந்த போது மீண்டும் என்டி ராமராவ் ஆட்சிக்கு வந்தார்.
இப்படி ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்து இருந்தாலும் இப்போது தமிழ்நாட்டில் தலைகாட்டுகின்ற அரசியல் நில வரங்கள், பல வழிகளிலும் விநோதமாகவும் வியப்பாகவும் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் தெரிகின்றன.
அதிமுகவின் பெருந்தலைவியாக இருந்து வந்த ஜெய லலிதா தன் அரசியல் வாழ்வில் மூன்று பேரை அரசியல் தலைமை ஏற்க தகுதியாளர்கள் என்று அடையாளம் கண்டார். உலக போலிசாக இருக்கும் அமெரிக்காவுக்கு ஹில்லரி கிளிண்டன் தலைமை ஏற்கவேண்டும்; உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியாவுக்கு தானே பொறுப்பு ஏற்கவேண்டும்; முடியவில்லை எனில் நரேந்திர மோடி தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது அவரின் அரசியல் கணக்காக இருந்தது.
(முழுமையாகப் படிக்க epaper.tamilmurasu.com.sg)