அஷ்வினி செல்வராஜ்
ஐம்பது நடனக் குழுக்களில் எட்டாயிரம் நடனக் கலைஞர்களின் பங்கேற்பில் 45வது சிங்கே அணிவகுப்பு பிரமிப்பூட்டும் வகையில் வண்ணமயமாக நடைபெற்றது. ஆசியாவின் ஆக பிரம்மாண்டமான தெருக் கொண்டாட்டம் எனும் பெருமையுடையது சிங்கே அணிவகுப்பு. சாதனை அளவில் இந்த ஆண்டு மக்கள் கழகத்தின் அடித்தள அமைப்புகளைச் சேர்ந்த 1,000 பேரும் அணிவகுப்பில் பங்கேற்றனர். மேலும், சீனா, மலேசியா, தென் கொரியா, ஜாப்பான், இந்தோனீசியா, கம்போடியா, தாய்லாந்து, தைவான் முதலிய நாடுகளில் இருந்து 10 நடனக் குழுக்கள் அணிவகுப்பில் பங்கேற்றன.
சிங்கே அணிவகுப்பு 1973ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் திரு லீ குவான் இயூவால் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் சந்திரப் புத்தாண்டின் 14, 15ஆம் நாட்களில் சிங்கே நடைபெறுவது வழக்கம். நேற்றும் அதற்கு முந்தைய நாளும் 'எஃப்1' கார் பந்தயக் கட்டடத்தில் இரவு எட்டு முதல் பத்து மணி வரை சிங்கே அணிவகுப்பு நடைபெற்றது.
ரேஷ்மி, ஈவா கல்லா கோவிந்தராஸ், ரேஷ்மா. படங்கள்: திமத்தி