இந்தியா - பங்ளாதே‌ஷ் டெஸ்ட்: பொறுப்பான ஆட்டம்

ஹைதராபாத்: நட்சத்திர ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹசன், அணித்தலைவர் முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோரின் பொறுப் பான ஆட்டத்தால் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி ஓரளவுக்கு நல்ல நிலையை எட்டி இருக்கிறது. அணித்தலைவர் விராத் கோஹ்லி இரட்டைச் சதமும் முரளி விஜய், ரித்திமான் சாஹா ஆகியோர் சதமும் அடிக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 687 ஓட்டங்களைக் குவித்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய பங்ளாதேஷ் அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ஓட்டங்களை எடுத்திருந்தது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நம்பிக்கை நாயகன் தமிம் இக்பாலை அந்த அணி இழந்தது. முதல் நாள் எடுத்திருந்த 24 ஓட்டங்களுடன் 'ரன் அவுட்' முறையில் அவர் ஆட்டம் இழந்தார்.

பங்ளாதேஷ் வீரர் மஹ்முதுல்லாவை (வலது) ஆட்டமிழக்கச் செய்த இஷாந்த் சர்மாவை (நடுவில்) பாராட்ட விரையும் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!