திரிஷா அண்மையில் 'நாயகி' என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தைப்போலவே தற்போது 'மோகினி' என்ற பேய்க் கதையில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். திரிஷா 'சதுரங்கவேட்டை=2', 'தானா சேர்ந்த கூட்டம்', '1818' என்று பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அரவிந்த்சாமியுடன் நடித்து வரும் 'சதுரங்க வேட்டை=2' படத்தில் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறார்.
தன்மீது கோபித்துக்கொள்ளும் மகளின் கோபத்தைத் தணிக்கும் வகையில் ஓர் உருக்கமான பாடலைப் பாடுகிறாராம் திரிஷா. படம் முழுவதும் ஆவேசமான காட்சிகளில் நடித்திருந்தபோதும் அந்த உருக்கமான காட்சியில் உண்மையான அம்மா போன்று பாச உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளாராம் திரிஷா. இந்தப் பாடல் காட்சி அண்மையில் சென்னையிலுள்ள விஜிபி தங்கக் கடற்கரையில் படமாக்கப்பட்டுள்ளது. நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பூர்ணா.