யாஸ்மின் பேகம், ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்
வீட்டில் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் இல்லாத நிலையில், உயர்நிலை ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே ஒரு துணைக்காக தம் பள்ளியில் படித்த மூத்த மாணவனைக் காதலிக்க ஆரம் பித்தார் ஜனனி (பெயர் மாற்றப் பட்டுள்ளது). தொடக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாகத் இருந்த காதல் வாழ்க்கை விரைவில் கசந்து போனது. ஜனனியின் காதலர் அவரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். யாருடன் பேசலாம், பேசக்கூடாது எனக் கட்டளை இட்டார். தினமும் பள்ளி முடிந்த வுடன், பள்ளிக்கு வெளியே ஜனனிக்காக காத்திருந்தார். ஜனனியை யாருடனும் பழக அவர் அனுமதிக்கவில்லை. ஒருபடி மேலே சென்று சில வேளைகளில் ஜனனியைப் பொது இடங்களில் அடித்ததோடு அவ் வப்போது அவமதித்து வந்தார் அவரது காதலர். அவருடனான காதல் உறவை முறித்துக்கொள்ள முயன்றபோது, இருவரும் நெருக் கமாக இருந்த விவரங்களை ஜனனியின் பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டினார்.