ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர்

ஏழு வருடங்களுக்குப் பிறகு துபாயில் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. கடந்த 1998ஆம் ஆண்டு அமீரகத்தில் ஏ.ஆர்.ரகுமான் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இசை நிகழ்ச்சி வரும் மார்ச் 17ஆம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் திடலில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளப் பண்பலை 99.6, மலையாள நாளிதழ் மாத்ருபூமி செய்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு நிகழ்வு பிப்ரவரி 8ஆம் தேதி 'தூசிட் தானி' என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், 1998ல் அமீரகத்தில் தான் நிகழ்த்திய முதல் இசை நிகழ்ச்சியைப் பல துபாய் வாசிகள் இன்னும் நினைவில் வைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!