லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழு தோற்கும்போதெல்லாம் அதன் நட்சத்திர ஆட்டக்காரர் மெசுட் ஓஸில்தான் அதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப் படுவது வழக்கமாகி வருகிறது. இதனால் ஓஸில் அதிருப்தி அடைந்துள்ளார் என்று அவரது மேலாளர் சோகட் கூறியதாக பிபிசி செய்தி தெரிவித்தது. பயர்ன் மியூனிக் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஆர்சனல் 1-5 எனப் படுதோல்வி அடைந்தது. இதனால் அக்குழு காலிறுதிச் சுற்று வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
தமிழ் முரசின் இ-பேப்பர்
epaper.tamilmurasu.com.sg