சிறிய நாடான சிங்கப்பூரை உலகம் போற்றும் மாநகராக உருவாக்க நமது முன்னோடித் தலைமுறையினர் செய்த தியாகமும் ஆற்றிய பங்கும் அளப்பரியது.
நவீன நாடானாலும் பசுமையான நகரம் என்ற பெயரை சிங்கப்பூருக்குப் பெற்றுத் தருவதில் முழுப் பொறுப்பு வகித்த அவர்களைப் போற்றிப் புகழ இந்தத் தீவில் பற்பல கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் பாது காக்கப்பட்டு வருகின்றன. இந்த முன்னோடிகளின் நினைவுகளை என்றென்றும் நாம் மறக்காமல் இருக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவுதான் நிறுவனர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கும் திட்டம்.
சமத்துவம், ஜனநாயக மரபு, நீதி, நேர்மை, ஒற்றுமை ஆகிய பண்புநெறிகளை அடித்தளமாகக் கொண்டு வெற்றிகளைத் தொடர்ந்து குவித்துள்ளது சிங்கப்பூர். அந்த நெறிகளை விதைத்தவர்களின் அடிச்சுவடு களை ஞாபகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த நினைவிடம். அந்தப் பண்புநெறிகளைக் கலங்கரை விளக்கமாகக் கொண்டு ஐம்பது ஆண்டுகளை வெற்றி கரமாகக் கடந்துவிட்டோம் என்ற திருப்தியுடன் நின்று விடாமல், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மேன்மேலும் சாதனைகள் புரிய சிங்கப்பூரை தயார்ப்படுத்தும் உத்தி யாகவும் இந்த நினைவிடம் திகழ்கிறது.
முழு விவரம்: epaper.tamilmurasu.com.sg