சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று அமெரிக்காவின் தற்காப்பு அமைச் சர் ஜேம்ஸ் மேட்டிசை சந்தித்தார். அமெரிக்காவின் அமைச்சர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு இந்த இரு அமைச்சர்களும் முதல் தடவை யாக நேற்று சந்தித்தனர். ஜெர்மனி யில் நடக்கும் 53வது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இரு அமைச்சர்களும் கலந்துகொள் கிறார்கள். அதனையொட்டி இரு வரும் சந்தித்துப் பேசினர். சிங்கப்பூருக்கும் அமெரிக்கா வுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்துவரும் உன்னதமான இரு தரப்பு தற்காப்பு உறவை இரு அமைச்சர்களும் மறுஉறுதிப்படுத் தியதாக நேற்று தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
விவரம்: epaper.tamilmurasu.com.sg