முன்னாள் ஃபோர்ட் தொழிற்சாலை யில் உள்ள இரண்டாம் உலகப் போர் காட்சிக்கூடத்துக்கு இப் போது மறுபெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சியோனான் காட்சிக் கூடம் என்று இருந்த பெயர் மாறி இப்போது அந்த இடத்திற்கு 'போரும் அதன் பதிவுகளும்' என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அந்தக் காட்சிக்கூடத்திற்கு நேற்று சென்ற பலரும் இந்தப் பெயர் மாற்றத்தை மிகவும் வரவேற் றனர். சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகக் கண்காட்சிக்குத் தொடக் கத்தில் சூட்டப்பட்ட பெயர் பொது மக்களிடையே அதிருப்தியைக் கிளப்பியது.
இரண்டாம் உலகப் போர் நடந்த போது 1942ல் ஜப்பானிய ராணுவத் திடம் பிரிட்டன் சரணடைந்து விட் டது. இதனையடுத்து சிங்கப் பூருக்கு ஜப்பானியர்கள் 'சியோ னான் டோ' என்று பெயர் சூட்டி னார்கள். இதற்கு 'தெற்கின் ஒளி' என்று பெயர். இப்போது இந்தக் கண்காட்சிக்கு வேறு பெயர் மாற் றப்பட்டு இருக்கிறது. 'ஜப்பானிய ஆக்கிரமிப்பு: போரும் அதன் பதிவுகளும்' என்ற தலைப்பில் அந்தக் கண்காட்சி நடக்கிறது.
சியோனான் காட்சிக் கூடம் என்ற பெயருக்கு மக்களிடத் தில் கடும் அதிருப்தி கிளம்பியதால் நேற்று முன்தினம் இரவே அந்தப் பெயர் அகற்றப் பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
விவரம்: epaper.tamilmurasu.com.sg