ஜோகூர் பாருவில் நேற்று அதி காலை நிகழ்ந்த சாலை விபத்தில் எட்டு இளையர்கள் பலியாகினர்; மேலும் எண்மர் காயமடைந்தனர். சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டி ருந்த அவர்கள் மீது 22 வயதுப் பெண் ஓட்டி வந்த கார் மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் களில் எண்மர் மரணமடைந்ததாக வும் சுல்தானா அமினா மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்போது வழியில் இருவரின் உயிர் பிரிந்த தாகவும் போலிஸ் துணை ஆணை யர் சுலைமான் சாலே தெரிவித்தார். காயமடைந்தோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக் கிறது. விபத்தில் சிக்கிய 16 பேரும் 13 முதல் 17 வயதுக்குட் பட்டவர்கள். மஹ்மூதியா முஸ்லிம் இடுகாட் டுக்கு அருகே அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக திரு சுலைமான் கூறி னார்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg