கோலாலம்பூர்: மலேசியாவில் ஷரியா நீதிமன்றங்களை வலுப் படுத்தும் விதமாக 'பாஸ்' எனும் இஸ்லாமியக் கட்சி முன்மொழிந்த சட்ட மாற்றங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் நேற்று ஆதரவு அளித்து உள்ளனர். கல்லெறிந்து கொல்லுதல், கை, கால்களை எடுத்தல் போன்ற தண்டனைகளுக்கு வழி விடும் இஸ்லாமியச் சட்டமான 'ஹடுட்' மலேசியாவில் அமல்படுத்தப்படுவதற்கு இது பாதை வகுக்கும் என கவனிப்பாளர்கள் கருத்துரைக்கின்றனர். இந்தச் சட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பெட்டாலிங் ஜெயாவில் நடத்தப் பட்ட பேரணியில் சில நூறு பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் மாலை 5 மணியோடு அது நிறைவுற்றதாகவும் கூறப்பட்டது.
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இரவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றுவார் எனக் கூறப்பட்டாலும் தகிக்கும் வெயிலிலும் படாங் மெர்போக்கில் பிற்பகல் மூன்று மணிக்கு முன்னதாகவே பாஸ் கட்சியின் ஆதரவாளர்கள் வயலட் நிற உடையில் கூடத் தொடங்கினர். படம்: தி ஸ்டார்
விவரம்: epaper.tamilmurasu.com.sg