திரு ஜோங் நாமின் உடல் மீது மலேசியா நடத்திய பிரேதப் பரிசோதனை அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியதுடன் தமக்கு எதிரி நாடான தென் கொரியாவுடன் மலேசியா கூடிச் செயல்படுவதாக நேற்று காலையில் வடகொரியா குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலளிக்கும் விதத்தில், நாட்டின் சட்ட முறைகளை மதிக்க வேண்டும் என மலேசியா குறிப்பிட்டிருந்தது.
திரு ஜோங் நாமின் உடலை உடனடியாக ஒப்படைக்குமாறு நேற்று முன் தினம் வடகொரியா மலேசியாவிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் ஜோங் நாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மரபணு மாதிரி கிடைத்த பிறகே இந்த வழக்கின் விசாரணை நிறைவுறும் என காவல்துறை உயரதிகாரி டான் ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறினார். மேலும், உடலை ஒப்படைப்பதை மலேசியா வேண்டுமென்றே தாமதப் படுத்துவதாக வடகொரியா கூறுவதை திரு காலிட் மறுத்தார்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg