சென்னை: சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக ரகசிய நம் பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கோரி திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் இரண்டு முறை அவையை ஒத்திவைத்தார் சபாநா யகர் தனபால். மேலும் திமுகவி னரை அவையில் இருந்து வெளி யேற்றவும் அவர் உத்தரவிட்டார். முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பை வேறொரு நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் கோரிக்கை விடுத்தபோது, அதை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினர் சபாநாயகரின் இருக் கையை முற்றுகையிட்டு முழக்கங் கள் எழுப்பினர். சிலர் சபாநாயகர் இருக்கைக்கு அருகே இருந்த சில நாற்காலிகளைத் தூக்கி வீசி னர். பேரவைச் செயலரின் நாற் காலி உடைக்கப்பட்டது. சபாநாயக ரின் மேசை தள்ளிவிடப்பட்டது.
விவரம்: epaper.tamilmurasu.com.sg