லண்டன்: அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை ஸ்பர்ஸ் குழு கைப்பற்றும் என்று அதன் முன்னாள் நிர்வாகி ஹேரி ரெட்நேப் தெரிவித்துள்ளார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகியாக இருந்தார். அப்போது அக்குழு லீக் பட்டியலின் நான்காவது இடத்தை இருமுறை பிடித்தது. அதுமட்டுமல்லாது, ரெட்நேப் பின் தலைமையின்கீழ் ஸ்பர்ஸ் முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ரெட்நேப் வகுத்த வியூகங்களின் காரணமாகச் சிறப்பாகச் செயல்பட்ட ஸ்பர்ஸ், 2011ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்கான காலிறுதி வரை சென்றது.
இப்பருவத்தில் நன்கு விளையாடி வரும் ஸ்பர்ஸ் கூடிய விரைவில் மாபெரும் வெற்றியாளராகும் என்று ஹேரி ரெட்நேப் (உட்படம்) தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி, இணையம்
விவரம்: epaper.tamilmurasu.com.sg