சிவகார்த்திகேயனை திரைக்குக்கொண்டு வந்தவர் நடிகர் தனுஷ். அவருடைய ஆதரவு இல்லாமல் சிவகார்த்திகேயன் திரையில் கதாநாயகன் அளவிற்கு உயர்ந்திருக்க முடியாது. தனுஷ் அவருடைய சொந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் சிவா நாயகனாக நடித்து வருகிறார். தற்பொழுது முன்னணி கதாநாயகனாகி விட்டார் சிவகார்த்திகேயன். இதற்கிடையில் சிவகார்த்திகேயனும் தனுஷும் பிரச்சினை காரணமாக பிரிந்து விட்டார்கள். பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் பேசிக்கொள்வது இல்லை. வளர்த்த கெடா மாரில் பாய்ந்தாலும் தனுஷ் சிவாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg