பாவனாவைக் கடத்தி 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தல்

நடிகை பாவனா திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் கொச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிலரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார். அதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் பாவனா. அதன்பின் தமிழில் சரியான வாய்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் கேரளாவில் அன்காமலி என்ற பகுதியில் வசித்து வருகிறார். திருச்சூர் அருகே படப்பிடிப்பு முடிந்து பாவனா நேற்று முன்தினம் இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

கார் கொச்சியை அடுத்த அன்காமலி அருகே சென்றபோது மற்றொரு காரில் வந்த மூன்று பேர் திடீரென பாவனாவின் காரை வழி மறித்தனர். அவர்கள் பாவனாவை மிரட்டி காருக்குள் ஏற்றிக்கொண்டனர். பின்னர் ஓட்டுநரை மிரட்டிக் காரைத் தொடர்ந்து ஓட்டும்படி எச்சரித்தனர். ஓட்டுநர் காரை ஓட்டத் தொடங்கியதும் பாவனாவை மிரட்டியதோடு அவருக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பாலியல் தொல்லைகள் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் விரும்பிய வகையில் விதம் விதமாக பாவனாவை போட்டோவுக்குப் போஸ் கொடுக்க வைத்துள்ளனர். கார் பாலாரி வட்டம் சந்திப்பை அடைந்தபோது மூவரும் காரை நிறுத்திக் கீழே இறங்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் மற்றொரு காரில் ஏறித் தப்பிச் சென்றனர்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!