வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட அண்ணன் கிம் ஜோங் நாம் கொலை தொடர் பில் மேலும் நான்கு வடகொரிய சந்தேக நபர்களைத் தேடி வரு வதாக மலேசிய போலிஸ் தெரி வித்துள்ளது. 33 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வரும் கிம் ஜோங் கொலையுண்ட அதேநாளில் மலேசியாவை விட்டுக் கிளம்பிய தாக துணைத் தலைமை போலிஸ் அதிகாரி நூர் ரஷித் இப்ராகிம் நேற்று செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.
ரி ஜோங் சோல் என அடையாளம் காணப்பட்ட நான்காவது சந்தேக நபரான வடகொரிய ஆடவர் நேற்று முன்தினம் செப்பாங் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். படம்: ராய்ட்டர்ஸ்
விவரம்: epaper.tamilmurasu.com.sg