சிங்கப்பூரில் உள்ள சில உணவங் காடி நிலையங்களில் கைபேசி மூலம் உணவுக்குப் பணம் செலுத்தலாம். ஆனால், இதுபற்றிய தகவல் சிலருக்கே தெரிந்துள் ளது. சில உணவுக் கடைக்காரர்கள் ரொக்கமில்லா பணம் செலுத்தும் சேவைக்கு 'லிக்குவிட் பே' எனும் கைபேசிச் செயலியைப் பயன் படுத்துகிறார்கள். இந்தச் செயலியைக் கொண்டு கடையில் ஒட்டப்பட்டுள்ள 'க்யூஆர் கோட்'ஐ பயன்படுத்தி மின்னியல் முறையில் பணத்தைச் செலுத்தலாம். செயலியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் பற்று அட்டையின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg