மாகாபா ஆனந்தை சோகமாக்கிய ‘பஞ்சுமிட்டாய்’ நாயகி

இயக்குநர் அமீரிடம் உதவியாளராகப் பணியாற்றிய எஸ்.பி.மோகன் இயக்கும் முழு நீள நகைச்சுவைப் படம் 'பஞ்சுமிட்டாய்'. மாகாபா ஆனந்த் கதாநாயகனாகவும் நிகிலா விமல் நாயகியாகவும் நடிக்கிறார்கள். "பாண்டியராஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வித்யுலேகா, சென்ட்ராயன், மாகாபா ஆனந்த், பாண்டியராஜன் ஆகியோர் கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். டி.இமான் இசையமைத்திருக்கிறார்," என்கிறார் மோகன். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள், பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் கலகலப்பாகப் பேசினார் மாகாபா ஆனந்த். "படத்தின் கதாநாயகி நிகிலா நன்றாக நடித்துள்ளார். ஆனால் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், படக்குழுவில் இருந்த என்னையும் சேர்த்து எல்லா ஆண்களையும் அவர் அண்ணா என்று அழைத்ததுதான்," என்று ஆனந்த் கூறியபோது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!