மாணவர்களைச் சந்தித்த ரொபெர்டோ கார்லோஸ்

யாஸ்மின் பேகம்

பிரேசில், ரியால் மட்ரிட் ஆகிய குழுக்களின் முன்னாள் பிரபல காற்பந்து நட்சத்திரம் ரொபெர்டோ கார்லோசும் சிங்கப்பூரின் முன் னாள் காற்பந்து ஆட்டக்காரரும் தொழில்நுட்பக் கல்விக்கழக விளையாட்டுப் பிரதிநிதியுமான ஃபாண்டி அகமது ஆகியோர் இம்மாதம் 13ஆம் தேதி தொழில் நுட்ப கல்விக்கழக (மத்திய கல்லூரியில்) மாணவர்களைச் சந்தித்தார்கள். தொழில்நுட்பக் கல்விக்கழகம் ஏற்பாடு செய்த 'விளையாட்டுகள் மூலம் நெறிமுறைகள்' எனும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர் களாக வந்திருந்த அவர்கள் இருவரும் காற்பந்து விளையாட்டு அவர்களின் வாழ்வை எவ்வாறு வடிவமைத்தது என்பது குறித்துப் பகிர்ந்துகொண்டனர். தமது வாழ்க்கை, காற்பந்துப் பயணம் பற்றி சுமார் 500 மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்களிடையே கூறி, மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமளித்தார் திரு ஃபாண்டி அகமது.

ரொபெர்டோ கார்லோஸ் கையொப்பமிட்ட பந்துடன் (இடமிருந்து) ராஜ் ரி‌ஷி, பிரவீன் குமார். படம்: திமத்தி டேவிட்

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!