சிங்கப்பூரில் 17 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக தண்ணீர்க் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வரிகளையும் சேர்த்து தண் ணீர்க் கட்டணம் இரு கட்டங்களாக 30% அதிகரிக்கவுள்ளது. இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து முதல் கட்ட உயர்வு நடப்பிற்கு வரும். 2018 ஜூலை முதல் தேதியில் இரண்டாம் கட்ட உயர்வு அமல்படுத்தப்படும். இருந்தபோதும், குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் இந்தக் கட்டண உயர்வைச் சமாளிக்க உதவிகள் கிட்டும்.
"கடைசியாக 2000ஆம் ஆண்டில் தண்ணீர்க் கட்டணம் உயர்த்தப்பட்டது. அண்மைய தண் ணீர் விநியோகக் கட்டணத்திற் கேற்ப நமது தண்ணீர்க் கட்ட ணங்களையும் உயர்த்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது," என்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து பேசியபோது நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.