எம்.கே.ருஷ்யேந்திரன்
உலகில் அரசியல், பொருளியல் துறைகளில் நிச்சயமில்லாத நிலை நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. உலகமயத் திற்கு எதிரான போக்கு உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் சிங்கப்பூரர்களின் உடனடி கவலைகளைத் தீர்க்கும் வகை யிலும் எதிர்கால வளர்ச்சிக்கு அடித் தளங்களை அமைக்கும் வகையிலும் புதிய வரவுசெலவுத் திட்டத்தை சிங்கப்பூரின் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சிங்கப்பூரர்கள் பரபரப்பாக பேசக்கூடிய அளவுக்குப் பல முக்கிய அம்சங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று இருக்கின்றன. தண்ணீர் கட்டணம் உயர்வது முதல் தனிப்பட்டவர்களின் வருமான வரி குறைவது வரை பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளும் திட்டத்தில் உள்ளன. தண்ணீர் கட்டணம் இரண்டு கட்டங் களாக ஜூலை முதல் 30% உயரும். இருந்தாலும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடிகள் ஆகியவை அதிகரிக்கப்படுவதால் தண்ணீர் கட்டண உயர்வு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று அமைச்சர் தெரிவித்தார்.