சிங்கப்பூர் நீச்சல் வீரரும் ஒலிம்பிக் வெற்றியாளருமான ஜோசப் ஸ்கூலிங் அமெரிக்காவில் நடந்து வரும் 'பிக் 12 நீச்சல், முக்குளிப்பு வெற்றியாளர்' போட்டியில் நேற்று மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். 100 மீட்டர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சலில் பந்தய தூரத்தை 44.06 வினாடிகளில் கடந்து தன்னுடைய முந்தைய சாத னையை தானே முறியடித்து உள்ளார். கடந்த ஆண்டு இதே தூரத்தை அவர் 44.62 வினாடி களில் கடந்தார். முன்னதாக, இதே போட்டியில் 50 மீட்டர் எதேச்சைபாணி நீச்சலிலும் ஜோசப் ஸ்கூலிங் சாதனை படைத்தது குறிப்பிடத் தக்கது.
வெற்றிக் களிப்புடன் சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங். படம்: இன்ஸ்டகிராம்