உள்ளூர் படைப்பாளர்களின் எழுத்துகளைத் தாங்கி நான்கு மொழிகளிலும் வெளிவந்துள்ள புதிய தொகுப்பு நூல்கள் 'நுழைவுச்சீட்டுப் புத்தகம்' (டிக்டெக் புக்). உள்ளூர் இலக்கியங்களை சிங்கப்பூரர்கள் அதிக அளவில் வாங்குவதை ஊக்குவிக்கும் 'உள்ளூர் இலக்கியங்களை வாங்குங்கள்' (BuySingLit) இயக்கத்தின் ஓர் அங்கமாக இந்தத் தொகுப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. ராஃபிள்ஸ் சிட்டி கடைத் தொகுதியில் நடைபெறும் எம்பிஎச் சின் புத்தகக் கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் உள்ளூர் எழுத்தாளர் களின் கதைகள், கவிதைகள், சித்திரக் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புத்தகத் தொகுப்பை கலாசார, சமூக, இளையர் துறைக்கான நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதியில் அமைந்திருக்கும் 'எம்பிஎச்' நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சியில் 'நுழைவுச்சீட்டுப் புத்தகத் தொகுப்பை' வெளியிட்டார் கலாசார, சமூக, இளையர் துறைக்கான நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் (இடமிருந்து மூன்றாவது). 'நகர்மனம்' எனும் தமிழ்ப் புத்தகத் தொகுப்பில் ஈடுபட்ட கவிதா கரும் (வலக்கோடி). படம்: மார்ஷல்கேவண்டிஷ்