தமிழ்நாட்டு அரசியலில் ஆளும் அதிமுக கட்சி இதுவரையில் சந்தித்திராத இமாலயப் பிரச்சினை களில் சிக்கி நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறத் தொடங்கி விட்ட நிலையில், முக்கிய எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எப்படியாவது கூடிய விரைவில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித் திருக்கிறது. சொற்ப பெரும்பான்மையில் ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிச் சாமியின் அரசாங்கத்தை நம் பிக்கை வாக்கெடுப்பில் தோற் கடித்துவிட பெரும் முயற்சிகளை மேற்கொண்டு அதில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இப் போது அடுத்த வியூகத்தை அரங்கேற்ற அந்தக் கட்சி பரபரப் பாக ஆயத்தமாகி வருகிறது.
அரசியல் காற்று தன் பக்கம் வீசத் தொடங்கிவிட்டதாக திமுக மகிழ்கிறது. படம்: ஊடகம்