பிரதமர்: தொழில்நுட்பத்தை தழுவுவதில் வேகம் போதாது

புதிய தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொள் வதில் சிங்கப்பூர் போதிய அளவுக்கு வேகமாக இல்லை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார். இந்தத் துறையில் மேலும் பலவற்றைச் செய்யவேண்டி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆற்றலைக் கூட்டவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பரவலான பல தொழில்நுட்பச் செயல்திட்டங்களை அமல் படுத்த சிங்கப்பூர் திட்டமிடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 'செக்கோய கேப்பிட்டல் இந்தியா' என்ற கூட்டுத்தொழில் முதலீட்டு நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்ப உச்சநிலைக் கூட் டத்தின் பிரத்தியேகக் கலந்துரையாடலில் திரு லீ பங்கேற்று கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 150 புதிய நிறுவன உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறைத் தலைவர் கள் கலந்துகொண்டனர்.

'செக்கோய கேப்பிட்டல் இந்தியா' முதலீட்டு நிறுவன உச்சநிலைக் கூட்ட பிரத்தியேக கலந்துரையாடலில் பிரதமர் திரு லீ சியன் லூங் (வலது) செக்கோய நிர்வாக இயக்குநர் சைலேந்திர சிங் ஆகியோர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!