சிறந்த சேவைக்கு அங்கீகாரம்

அஷ்வினி செல்வராஜ்

தன்னுடைய ஆறு வயது மகளை எங்கு தேடியும் காணவில்லை என்று கொச்சிக்குப் பயணத் தொடர் விமானத்தின் மூலமாகச் செல்ல சாங்கி விமான நிலையத் தில் பரிதவித்துக் கொண்டிருந்த பெண்மணியைக் கண்டார் திரு ராஜேந்திரன் கந்தசாமி, 52. சற்றும் தயங்காமல் அவரை அணுகி, அவரின் மகளைப் பற்றி பொது அறிவிப்பு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யக் கோரினார். மற்ற ஊழியர்களின் துணையோடு இடைத்தங்கல் பகுதியில் அச் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டார் திரு ராஜேந்திரன். சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாலும் தாயும் மகளும் விமானத்தைத் தவறவிட்டனர்.

இதையறிந்த திரு ராஜேந்திரன், மறுநாள் புறப்பட்ட அடுத்த விமானத்தில் அவர்கள் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். "வேலைமுடிந்து நான் அன்றிரவு வீடு திரும்பும் நேரம் அந்தப் பெண்மணி இன்னும் விமான நிலையத்தில் இருப்பதைப் பார்த்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த அவர்கள் இருவரும் சாங்கி விமான நிலைய விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தேன்," என்றார் செர்டிஸ் சிஸ்கோவில் விமானத் துறை பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் திரு ராஜேந்திரன்.

சாங்கி விமான நிலையக் கொண்டாட்டத்தில் தலைசிறந்த சேவை ஊழியர் (வெள்ளி) விருதுபெற்ற திரு ராஜேந்திரன் கந்தசாமி (நடுவில்), தலைசிறந்த சேவை ஊழியர் (வெண்கலம்) விருது பெற்ற திரு பதம் தேவ் ராம் சிங் (வலது). படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!