வில்சன் சைலஸ்
நீண்டநாள் கனவு நனவாக இருந்த வேளையில் அதைத் தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலை உருவானது. உயர் ரக மோட்டார் சைக்கிள் வாங்க சிறுகச் சிறுக சேர்த்தது போதாமல் போய்விட்டது. சொந்த உழைப்பில் தனது முதல் மோட்டார்சைக்கிளை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 27 வயது சிராஜின் புலம்பல் இது. மோட்டார்சைக்கிளின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த முகம்மது சிராஜ் முனிர், ஆக அண்மையில் வெளியான வரவு செலவுத் திட்டத்தினால் அதிருப்தி அடைந்தவர்களில் ஒருவர். மூன்றடுக்காகும் மோட்டார் சைக்கிள்களுக்கான கூடுதல் பதிவுக் கட்டணம் அதிக விலை யுடன் கூடிய மோட்டார்சைக்கிள் வாங்கும் அவரது ஆசையைத் தற்காலிகமாக முடக்கிவிட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 600சிசி ரக மோட்டார் சைக்கிளுடன் முகம்மது சிராஜ் முனிர். படம்: சிராஜ் முனிர்