கல்வி, திறன் மேம்பாட்டுக்கு உதவிக்கரம்

கணபதியின் பெற்றோர் இருவரும் வீட்டில் மிக சுவையான உணவை சமைத்துத் தருவார்கள். குறிப்பாக, தாயார் சமைக்கும் பிரியாணியின் மீது கணபதிக்கு மிகவும் விருப்பம் என்பதால் தாயாரைப் போல் தானும் சுவையான உணவைச் சமைக்கவேண்டும் என்று அவரும் விரும்பினார். முதன்முதலாக ஆட்டிறைச்சி பிரியாணி செய்த அவரது சமையல் பயணம் முக்கியமான இலக்குடன் தொடர்கிறது. சமையல் திறனை வளர்த்துக்கொள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சமையல் படிப்பை மேற்கொண்டார் கணபதி தனபாலன், 22. தேசிய சேவைக்குப் பிறகு, குடும்பத்தினர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் 'ஷாடெக்' எனப்படும் சிங்கப்பூர் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை கல்வி மையத்தில் இப்போது பயின்று வருகிறார். 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' எனப்படும் வருங்காலத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவர் மேற்கொள்ளும் படிப்பிற்கு 90% தள்ளுபடியில் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

சமைத்த உணவை அலங்கரிக்கும் கணபதி தனபாலன்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!