வளங்களைப் பகிர்ந்து செயல்திறன் மேம்பாடு

நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்த தீர்வுகள் உருவாக்குவதுடன் மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தையும் வழங்குகிறது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயல்படும் 'சிஓஐ-எஸ்சிஎம்' எனப்படும் புத்தாக்க, விநியோகத் தொடர்பு நிர்வாக நிலையம். நிறுவனங்கள் தனிப்பட்ட திறன்களை வளர்ப்பதுடன் ஒன்றிணைந்து நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொண்டு பொதுவான சவால்களைச் சமாளிக்கும் விதத்தில் 2013ஆம் ஆண்டிலிருந்து பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்கி வருகிறது இந்த நிலையம். ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம், 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' ஆகிய அமைப்புகள் இணைந்து 2012ஆம் தொடங்கிய இந்த நிலையம், மாணவர்கள் வேலை அனுபவம் பெற அரிய வாய்ப்பை அளிக்கிறது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தொழில்துறைப் பொறியியல் துறையில் பயிலும் கார்த்திகேயன் சண்முகம், 25 (படம்), 'சிஓஐ-எஸ்சிஎம்' வழங்கும் உள்ளகப் பயிற்சியில் ஈடுபட்டபோது செய்முறை அனுபவத்தைப் பெற்றதாகக் கூறினார்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!